ராசிக்கல் மோதிரம்

ராசிக்கல் மோதிரம் ஐம்பொன்னில் செய்து நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன் இது 

பெரும்பாலும் ராசியை பார்த்து கொடுப்பது அல்ல லக்னத்துக்கு யோகம் தரும் கிரகம் 

எது இப்போது திசை நடத்தும் கிரகம் எது என பார்த்து சிபாரிசு செய்கிறேன்..அனைவருக்குமே 

அதிர்ஷ்டக்கற்கள் அணிந்தால், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும் என்ற நம்பிக்கை 

இருக்கிறது.ஒருவேளை அவ்வாறு இல்லாவிட்டாலும், அத்தகைய கற்களை வாங்கி அணியும் 

முன், மனதில் ஒருவித உறுத்தல் நிச்சயம்இருக்கும். பலர் நன்கு சந்தோஷமாக, வீடு, கார் 

போன்றவற்றை பெற வேண்டுமென்று, பல ஜோதிடர்களை சந்தித்து, தங்கள்ராசிக்கு எந்த கற்களை 

அணிந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று கேட்டு, ராசிக்கற்களை அணிகின்றனர்.
மேஷம்பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும்,அதிர்ஷ்டம் உண்டாகும். பவளம் (Precious coral அல்லது red coral) என்பது கோரல்லியம் ரூப்ரம் (Corallium rubrum) என்றஉயிரினத்தின் பொதுப் பெயராகும். இதன் வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன்தனித்தன்மையாகும். பவளம்  ஒரு நவரத்தினம். இது நகைகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

ரிஷபம்வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும்கொடுக்கும். வைரம் அல்லது Diamond மிக பிரபலமான 
ராசி கல்.

மிதுனம்மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் .

கடகம்முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் 
செல்வ விருத்தியும் அளிக்க வல்லது. முத்து அல்லது Pearl  ஒரு பரவலாக 
பயன்படுத்தப்படும் ராசிக் கல்லாகும்.

சிம்மம்மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னிமரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் 
விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

துலாம்வைரம் (Diamond):
துலாம்வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம்பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும்.கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசுகனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும்.இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

மகரம்நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும்
செல்வாக்கையும், தெய்வீகத் தன்மையையும் கொடுக்க வல்லது

கும்பம்நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்
தன்மையையும் கொடுக்க வல்லது


மீனம் – கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும்.இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

மோதிர விரல்
மோதிர விரலை அநாமிகா என்பார்கள்,இது சூரியனின் ஆதிக்கத்தில்
உள்ளது, இதில் குரு,ராகு ,செவ்வாய்,கேது சம்மந்தப்பட்ட இரத்திணங்
களை அனிய வேண்டும் ,எந்த இரத்திணத்தின் மோதிரத்தையும் இந்த
விரலில் அணியலாம்,நன்மையே தரும், இதனால்தான் மோதிரவிரல்
என்று அனைவரும் சொல்கிறோம்


No comments:

Post a Comment