Friday, 31 January 2014

நவரத்தினங்களில் கோமேதகம்



நவரத்தினங்களில் கோமேதகம் 


கோமேதகம்  தேனின் நிறமுடையதாகவும் ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு  கோமேதகம் என்று பெயரிட்டனர்.தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.
 ராகுவின் திசை நடப்பில் உள்ளவர்களும் திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரக்காரர்களும் கோமேதகக் கல்லை அணியலாம். கோமேதகக் கல்லை வெள்ளி அல்லது தங்கத்தில் பதித்து  மோதிர விரலில் உடலில் படும் படி அணிவது உத்தமம்.
 கோமேதகத்தின் பயன்கள் கோமேதகக் கல்லை அணிவதால் தோலில் உண்டாகக்கூடிய நோய்கள், உடலில் உண்டாகக்கூடிய வலிகள், கட்டிகள், வண்டி, வாகனங்களில் செல்வதால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும்... தேன் நிறத்தில் காணப்படும் ஜிர்க்கான் கற்கள் கோமேதகம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகின்றன. மெல்லிய கருப்பு நிற, ஒளியற்ற தன்மை, கடினமான தட்டையான மஞ்சள் நிற கண்ணாடிக்கல் போல் தோற்றம் தருவது சராசரியான தன்மை கொண்டவைகளே. கோமேதகம் விலை குறைவுடையது என்பதாலும், எளிதில் கிடைக்கப்பெறுவது என்பதாலும் இதற்கு மாற்றுக் கல் தேவையில்லை.
 

No comments:

Post a Comment